அன்பார்ந்த தோழர்களே.........!
அனைவருக்கும் வணக்கம்,
சேலம் மாவட்ட வருவாய்த்துறைஊழியர்களின் நலனிற்காக தமிழ்நாடுவருவாய்த்துறை அலுவலர் சங்கம் துவக்கி இருக்கும் திட்டம் தான் “TNROA காப்பீட்டு திட்டம்”. இந்த திட்டத்தின் நோக்கம் அல்லும் பகலும் அயாரது உழைத்துக்கொண்டிருக்கும் ஊழியர்களின் உடல்நல குறைபாடுகளினால் பாதிக்கப்படும் போது நோய்களின் அடிப்படையில் நம்மால் இயன்றதினை நமது உடன்பிறவா உறவுக்காக ஆதரவு கரம் நீட்டும் நல்லெண்ண அடிப்படையில் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெகுசிறப்பாக யார் தலையீடும் இல்லாமல் நடைபெறும் நோக்கில் இந்த திட்டம் சங்கம் சாராத தனியான தலைமையின் கீழ் இயக்கப்படுவதுதான் சிறந்தது என்ற முடிவின் அடிப்படையில் தான் காப்பீட்டு திட்டத்திற்கான தலைவர் (மற்றும்) செயலாளர் ஆகியோர் தமிழ்நாடுவருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் முடிவின்படி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை ஊழியர்களின் சுமையினை ஓரளவு இந்த திட்டம் குறைக்கும் என்ற தூய்மையான எண்ண ஓட்டத்தில் தொடங்கப்படவுள்ளது. அதற்காகத்தான் வெளிப்படையான வரவு-செலவுகளை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றநிலையின் வெளிப்பாடுதான் இந்த இணையதளம், அன்பார்ந்த தோழர்களே... அனைவரும் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் எதிகொள்ளும் மருத்துவ செலவீனத்தினை ஓரளவு ஈடுகட்ட முன்னெடுப்போம்....
அனைவரும் வாரீர்.... காப்பீட்டு திட்டத்தில் இணைவீர்....
என்றும் தோழமையுடன்
தலைவர் / செயலாளர்
TNROA காப்பீட்டு திட்டம்
|